ஜும்ஆ உரைகள்- பொறுப்புக்களும் நடைமுறைகளும்.
'டெங்கு நோய் ஏற்பட்டால், அதற்கு வைத்தியம் செய்ய மட்டும்தான் மருத்துவர்களுக்கு முடிகிறது. அது ஏன் ஏற்படுகிறது? எதனால் வருகிறது என்பவற்றை அவர்களால் கூற முடியவில்லை. எமக்கு முன்னுள்ள மக்கள் நுளம்புக் கடிக்குள்ளும் சாக்கடைகளுக்கு அருகிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வாறான நோய்கள் வந்ததில்லை. மனிதர்களின் கைகள் தேடிக் கொண்டவற்றின் (பாவங்களின்) விளைவு இது.' ஜூம்ஆப் பிரசங்கம் ஒன்றின்போது கதீப் ஒருவர் முன்வைத்த விடயங்கள் இவை. இக் கருத்துக்களில் உள்ள விகடங்களை சாதாரண பாடசாலை மாணவனாலேயே இனங்கண்டு கொள்ள முடியும்.
டெங்கு நோய்க்கான காரணம் மருத்துவ உலகில் தெளிவாக அறியப்பட்டிருக்கிறது. நோய்க் காரணியும் காவிகளும் இனங்காணப்பட்டிருக்கின்றன.
அவற்றை விளக்க முடியாத நிலையில் மருத்துவர்கள் இல்லை. ஒரு முஸ்லிம், இந்த பூமியில் சமநிலையை நிலைநாட்ட வேண்டிய, அதற்காக உழைக்க வேண்டிய, மிகப் பெரும் பொறுப்பைச் சுமந்தவன். சமூகச் சூழலிலும் பௌதீகச் சூழலிலும் இத்தகைய சமநிலையை அவன் பேண வேண்டும். சூழல் பற்றிய கரிசனை உள்ளவனாக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும் என்பதை அதிகமான நபிமொழிகள் வலியுறுத்துகின்றன. சாக்கடைச் சூழலில் வாழ்ந்துகொண்டு ஒரு சில வணக்க வழிபாடுகளில் மட்டும் மும்முரமாக ஈடுபடுவதால் ஒருவர் பூரணமான இஸ்லாமிய வாழ்வொழுங்கைக் கடைப் பிடித்தவராக ஆகமாட்டார். சூழல் சமநிலை குழப்பப்படும்போது அதற்கான விளைவுகளையும் அனுபவித்தே ஆகவேண்டும். தொற்று நோய்கள் தொடர்பான இஸ்லாமிய விழிப்புணர்வூட்டல் இந்த இறை நியதியைத் தெளிவாக விளக்க வேண்டுமே தவிர பாமரத்தனமான சிந்தனைகளை உதிர்க்கக் கூடாது.

ஜும்ஆ பிரசங்கம், முஸ்லிம் சமூகத்தை விழிப்பூட்டுவதற்கும் அறிவூட்டுவதற்கும் கிடைத்திருக்கும் பெறுமதி மிக்க ஊடகம். ஜும்ஆவுக்கு சமூகமளிக்கும் பலதரப்பட்ட அறிவு மட்டங்களையும் கொண்ட மக்களைக் கருத்திற் கொண்டு கவனமாகத் திட்டமிடப்பட வேண்டியவை ஜும்ஆ உரைகள். அனைவராலும் புரிந்துகொள்ளப்படத்தக்க விதத்தில் எளிமையாகவும் அதே வேளை தரம் வாய்ந்தவையாகவும் அவை அமைய வேண்டும். இதற்கேற்ற அறிவுப் பின்னணியும் தேடலும் உள்ளவர்களாக 'கதீப்' மார்களும் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கு மாற்றமாக அமையும்போது பாதகமான விளைவுகளே ஜும்ஆப் பிரசங்கங்களால் உருவாகும். இந்த விடயங்களை பள்ளிவாயல் நிருவாகத்தினரும் கவனத்திற் கொள்ள வேண்டும். கதீப்மார்களும் தமக்குத் தெரியாத துறை சார்ந்த விடயங்களில் போதிய அறிவில்லாமல் கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் பொறுப்புணர்வுடன் அணுகப்பட வேண்டிய விடயங்கள் இவை.
முஸ்லிம் சமூகம் என்ற எல்லையையும் தாண்டி முஸ்லிமல்லாத சகோதர சமூகங்களைச் சேர்ந்த மக்களும் ஜும்ஆப் பிரசங்கங்களைச் சில சந்தர்ப்பங்களில் அவதானிக்கின்றனர். பள்ளிவாயல்களில் நிகழ்த்தப்படும் உரைகளை தாமும் செவிமடுப்பதாக எம்மிடம் நேரடியாகத் தெரிவிக்கும் முஸ்லிம் கிராமங்களின் அயலில் வாழும் முஸ்லிமல்லாத சகோதரர்களும் இருக்கிறார்கள். பொறுப்பற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்கள் இஸ்லாத்தை பிற்போக்கான கருத்துக்களைக் கொண்ட கொள்கையாக உருவகித்துக் காட்டிவிடும்.
இஸ்லாத்தின் வாழ்வியல் வியாபகத் தன்மையை மறுதலிக்கக் கூடிய, அதனை குறுகிய மதக் கருத்தியலாக சுருக்கிவிடக் கூடிய சிந்தனைப் போக்கினை முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாக்குபவையாக குத்பா உரைகள் அமையக் கூடாது. கதீப்மார்கள் இந்த விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக