திருமறையின் மருத்துவ விந்தைகள்
14 நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் அல்குர்ஆன், இணையற்ற ஓர் அற்புதமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. அதன் ஓர் அங்கமாக, நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் அல்குர்ஆனின் கருத்துக்களை உண்மைப்படுத்தி நிற்கின்றன. அல்குர்ஆனின் மருத்துவ விந்தைகளைக் கூறும் இந்நூல் Medical Miracle of Holy Quran எனும் ஆங்கில நூலொன்றின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
பெண்கல்வி ஓர் இஸ்லாமிய நோக்கு
பெண்களின் உhமைகள் மறுக்கப்பட்டிருந்த காலத்திலேயே இஸ்லாம் பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கல்வி பெறவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாத்தில் பெண்கல்வி தொடர்பான தவறான பிரச்சாரங்களுக்கு மறுப்பாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஆதர்.சீ.கிளார்க்கும் செய்மதித் தொடர்பாடல் தொழிநுட்பமும்
ஆதர்.சீ.கிளார்க், 20ம் நூற்றாண்டில் தோன்றிய புகழ்பெற்ற புனைகதை எழுத்தாளர். செய்மதித் தொடர்பாடல் தொழில்நுட்பத்துக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆதர்.சீ.கிளார்க்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் செய்மதித் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் வளர்ச்சிப் போக்குகள் என்பன தொடர்பாக இந்நூல் குறிப்பிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக