மனித உடல் எனும் அற்புதப் படைப்பு
'அவன்தான் அல்லாஹ் உங்கள் இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எல்லாப் பொருட்களின் படைப்பாளனும் அவனே. ஆகவே, அவனையே வழிபடுங்கள். இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.' –அல்குர்ஆன் 6:102
இறைவனின் அற்புதப் படைப்பான மனித உடல் பற்றிய சில தகவல்கள் இதோ:
மனித உடல் ட்ரில்லியன் கணக்கான கலங்களால் ஆனது. இவற்றில் ஏறத்தாழ 100 ட்ரில்லியன் (100,000,000,000,000) வரையான உயிருள்ள கலங்கள் காணப்படுகின்றன.
மனித மூளையில் 100 பில்லியன் நரம்புக் கலங்கள் காணப்படுகின்றன. நரம்புக் கலங்களுக்கூடாக செய்திகள் (கணத்தாக்கம்) மணிக்கு 170 மைல் வேகத்தில் கடத்தப்படுகிறது.
மனிதக் கண்ணின் விழித்திரையில் 137 மில்லியன் ஒளி உணர் கலங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 130 மில்லியன் கோல் கலங்களும் 7 மில்லியன் கூம்புக் கலங்களுமாகும். கூம்புக் கலங்களே நிறங்களை உணரக்கூடியன. ஒரு செக்கனில் 150 மில்லியன் துடிப்புகள் (pரடளந) கொண்ட செய்தி கண்ணிலிருந்து மின் சமிக்ஞைகளாக மூளைக்கு செல்கிறது.
உலகிலுள்ள மிகச் சிறந்த குளிர்பதனாக்கும் தொகுதி (யுசை ஊழனெவைழைniபெ ளுலளவநஅ) மூக்காகும். நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் வெப்பநிலையை சீர்செய்வதோடு வடிகட்டும் தொழிலையும் செய்கிறது.
3000 வரையான பொருட்களின் வாசனையைப் பிரித்தறியும் ஆற்றல் மனித மூக்கிற்கு உண்டு.
நுரையீரலில் 300 மில்லியன் வரையான காற்றுச் சிற்றறைகள் உள்ளன. இவற்றை விரித்தால் ஒரு சிறிய மைதானத்தின் பரப்புக்குச் சமனாக வரும்.
சுவாசப் பாதையினுள் உணவோ திரவங்களோ சென்றால், இருமல் ஏற்படும். இருமும்போது மணிக்கு 960 கிலோமீற்றர் வேகத்தில் வளி வெளியேற்றப்பட்டு சுவாசப் பாதையுள் சென்ற பொருட்கள் வெளியேற்றப்படும்.
ஒரு நாளில் மனிதன் 24,000 தடவை சுவாசிக்கிறான்.
60-70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில், அவரது இதயம் 3000 மில்லியன் தடவை துடிக்கிறது. தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே துடிக்க ஆரம்பிக்கும் இதயம், மரணத்தின்போதுதான் ஓய்வெடுக்கிறது.
ஒவ்வொரு நாளும் குருதியானது 60,000 மைல் பயணம் செய்கிறது.
நான்கு அங்குலம் மட்டுமே நீளமான மனித சிறுநீரகத்தில் 1,200,000 வரையான சிறுநீரகத்திகள் எனும் நுண்குழரய் போன்ற வடிகட்டும் அமைப்புக்கள் உள்ளன. இந்நுண்குழாய்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து நீட்டினால், 31 கிலேமீற்றர் வரை செல்லும்.
ஒரு துளிக் குருதியில் 250 மில்லியன் செங்குருதிக் கலங்கள் உள்ளன. செங்குருத்pக் கலங்களின் ஆயுள் 120 நாட்களாகும். ஒரு நாளைக்கு 200 பில்லியன் செங்குருதிக் கலங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
உணவுக் கால்வாயின் மொத்த நீளம் 27 அடியாகும்.
சிறுகுடற் சுவரில் மில்லியன் கணக்கான சடைமுளைகள் காணப்படுகின்றன. அதேபோன்று, மில்லியன் கணக்கான சமிபாட்டுச் சுரப்பிகளும் காணப்படுகின்றன. இச்சுரப்பிகளால் ஒவ்வொரு நாளும் 2.1 லீற்றர் குடற்சாறு சுரக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக