நிகழ்வு:- றிஸ்வி நகர், மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல் திறப்பு விழா.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் வேண்டுகோளின் பேரில் ஜமாஅத்தின் சமூக வேவைப் பிரிவான இனால் புதிய காத்தான்குடி றிஸ்வி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல் இன்று (21-04-2014) அஸர் தொழுகையுடன் திறந்துவைக்கப்பட்டது.
றிஸவி நகர் அல்-இக்பால் வித்தியாலய அதிபரும் புதிய காத்தான்குடி, பதுறியா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவருமான அல்ஹாஜ் ஹனீபா அவர்களின் தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அனுராதபுர நாஸிம் எம்.எச்.எம்.நிசாம் (காசிபி) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்ற நாஸிம் எம்.எம்.எச்.எம்.இப்றாஹீம் (ஆசிரியர்) அவர்களின் உரையும் இடம்பெற்றது.

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர் செய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி), காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தலைவரும் காழி நீதிபதியுமான மௌலவி அலியார் (பலாஹி) உட்பட உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், SFRD பிரதிநிதிகள், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் ஊழியர்கள், ஊர் பிரமுகர்கர்கள் உட்பட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக