திங்கள், 14 ஏப்ரல், 2014

நிகழ்வு - இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டற் கருத்தரங்கு

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (14-04-2014) காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 வரை காத்தான்குடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. காலை 9:00 மணிமுதல் 10:00 மணி வரை பெண் மாணவிகளுக்காகவும் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை ஆண்களுக்காகவும் என இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் அஸ்ஸெய்க் அன்சார் (நளீமி) BA, SLAS (உதவி பிரதேச செயலாளர்), அஸ்ஸெய்க் M.T.M.சப்ரி (நளீமி), அஸ்ஸெய்க் ரிஜ்பான் (இஸ்லாஹி), அஸ்ஸெய்க் இஸ்ஸத் (இர்பானி), அஸ்ஸெய்கா A.G.ஸம்ஹா (சித்தீகியா) ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடம், மாதம்பை இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரி, குருநாகல் இர்பானியா அறபு இஸ்லாமிய கலாபீடம், மாவனெல்ல ஆயிஸா ஸித்தீகா அறபுக் கல்லூரி, பாத்திஹ் கல்வி நிறுவனம் ஆகிய இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்கள் பற்றிய அறிமுகத்துடன் குறித்த உயர் கல்வி நிறுவனங்களின் நேர்முகப் பரீட்சைகளுக்குத் தோற்றுவது தொடர்பான வழிகாட்டல்களும் இச் செயலமர்வில் வழங்கப்பட்டன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக