ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நிகழ்வு:- பெருநாள் ஒன்றுகூடல்

தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தில் கல்வி மானிப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டிலான ஈதுல் பித்ர் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்று, 2013-08-18 காலை 11 மணியளவில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தின் இணைப்பாளரும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபருமான திரு எஸ்.யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய கற்கை நிலையத்தின் விரிவுரையாளர்களும் மூன்றாம் வருட ஆசிரிய பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக