நூல் அறிமுகம்:- 'இஸ்லாம் வழிகாட்டி'-தரம் 10, 11க்கான வினா-விடை'
'இஸ்லாம் வழிகாட்டி – கரம் 10, 11 க்கான வினா விடை' எனும் நூல் க.பொ.த
(சாதாரண தரம்) பரீட்சையில் இஸ்லாம் பாடத்துக்குத் தோற்றும் மாணவர்களின்
நலன் கருதி தயாரிக்கப்பட்டதாகும். காங்கேயனோடை அல்-அக்ஸா மகா
வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட ஆசியராகப் பணிபுரியும் மௌலவி ஏ.ஜே.முஹம்மது
அஸ்ரப் (பலாஹி) அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூலானது க.பொ.த சாதாரண தர
இஸ்லாம் பாடத் திட்டத்தை முழுமையாகத் தழுவியதாகும். அகீதா (கொள்கை), இபாதத்
(வணக்க வழிபாடுகள்), அஹ்லாக் (நற்பண்புகள்), முஆமலாத்
(கொடுக்கல்-வாங்கல்), மஸாதிரு ஷரிஆ-ஜினாயாத் (சட்ட மூலாதாரம்,குற்றவியல்),
முனாகஹாத் (குடும்;ப வாழ்வு), அத்தாரிகுல் இஸ்லாமியா (இஸ்லாமிய வரலாறு),
மபாஹிமுல் இஸ்லாமிய்யா ஆகிய தலைப்புக்களில் தரம்-10இலும் 11இலும் உள்ள
விடயங்கள் வினா-விடை ஒழுங்கில் தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றலை இலகுவாக்கும் வகையிலும் கால விரயத்தைத் தவிர்க்கும்
வகையிலும், பரீட்சைக்கு சிறப்பாகத் தயாராகும் வகையிலும் கடந்த கால பரீட்சை
வினாத்தாள்கள் மற்றும் புள்ளித் திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு
இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சாதாரண தர இஸ்லாம் பாட வினா-விடை
நூல்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இக் குறையினை இந்நூல் நிவர்த்தி
செய்துவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்புகளுக்கு:-
ஏ.ஜே.முஹம்மது அஸ்ரப்,
மட்மமகாங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயம்,
ஆரையம்பதி.
தொலைபேசி:- 0773659557, 0754283170
மின்னஞ்சல்:- ashraffaj48@gmail.com
தொடர்புகளுக்கு:-
ஏ.ஜே.முஹம்மது அஸ்ரப்,
மட்மமகாங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயம்,
ஆரையம்பதி.
தொலைபேசி:- 0773659557, 0754283170
மின்னஞ்சல்:- ashraffaj48@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக