நிகழ்வு-கல்வி மானி முதலாம் வருட மாணவர்களை வரவேற்றல்
தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தில் இம்முறை கல்வி மானி பட்டக் கற்கை நெறியினைப் பயில்வதற்காகத் தெரிவாகியுள்ள முதலாம் வருட ஆசிரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் திசைமுகப்படுத்தும் நிகழ்வும் 16-11-2013 காலை 10 மணியளவில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பிராந்தியக் கற்கை நிலையத்தின் இணைப்பாளரும் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபருமான திரு. எஸ். யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த கற்கை நிலையத்தில் கல்வி மானிப் பட்டக் கற்கை நெறியினைத் தொடரும் இரண்டாம், மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புகைப்பட உதவி:- ஜனாப் ஏ.எல்.அப்துல் அஸீஸ் (மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக