ஆசூறா - அடிமைத் தளையில் இருந்து விடுதலை
உலக அதிசயமாகத் திகழும் பிரமிட்டுக்களின் பின்னால் ஒழிந்திருக்கும் சோக வரலாறு அனேகமானோர் அறிந்ததே. மனிதனின் அடிமைத்துவ வரலாற்றின் இன்னொரு பக்கமே, ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்தக் கல்லறைகளாகும். வாழும்போது ஆடம்பரமாக வாழ்ந்த ஆதிக்க சமூகம் ஒன்று, மரணித்த பின்னரும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற அற்பத்தனமான பேராசையின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டவையே இந்த அதிசயக் கட்டடங்களாகும்.
இவ்வாறான ஆதிக்க வெறியின் போதையில் மயங்கிக் கிடந்த, எகிப்திய ஆதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு நசுக்கப்பட்ட சமூகமே இஸ்ரேலிய சமூகமாகும். வாழ முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த அந்த சமூகத்திற்கு, மூஸா (அலை) எனும் அற்புத மனிதரின் மூலம், இறைவன் விடுதலை கொடுத்தான். அந்த அற்புத வரலாற்றின் நினைவு தினமே ஆசூறா.உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் இன்னுமொரு சமூகத்திற்கு விடுதலை கிடைத்த அந்த நாளை நன்றியோடு நினைவு படுத்துகின்றனர், நோன்பு நோற்று இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். உன்னத இறைத் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இதற்கு வழிகாட்டினார்கள். 'வரலாற்று நெடுகிலும் தமக்கு விரோதிகளாக இருக்கும் ஒரு சமூகத்தின் முன்னோர்களுக்கு விடுதலை கிடைத்த நாளை ஏன் முஸ்லிம்கள் நினைவுபடுத்துகின்றனர்' என்ற வினா எழுவது இயற்கையானதே.
இஸ்லாத்தின் அற்புதமான அரசியல் கொள்கையே இதற்குக் காரணமாகும். எல்லா வகையான அடிமைத் தளைகளில் இருந்தும் மனிதன் விடுதலை பெறவேண்டும் என இஸ்லாம் விரும்புகிறது. எனவே, மனிதனின் மீது சுமத்தப்படும் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் சுரண்டல்களையும் இந்த அற்புத மார்க்கம் எதிர்த்து நிற்கின்றது. அரசியல் ரீதியாக மட்டுமன்றி சிந்தனை ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் கூட ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனுக்கு அடிமையாக இருப்பதை அது சகித்துக் கொள்ளவில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றுமொரு மனிதனை அல்லது மனித சமூகத்தை ஆள்வதைக்கூட இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
இந்த விடுதலையும் சுதந்திரமும் தனியொரு இனத்துக்கோ பிரதேசத்துக்கோ சொந்தமாக இல்லாது பூமியின் முகட்டில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் அவாக் கொள்கிறது. மற்றைய எல்லா சிந்தனைகளில் இருந்தும் அரசியற் கோட்பாடுகளில் இருந்தும் இந்த அடிப்படையில் இருந்துதான் இஸ்லாம் வேறுபடுகிறது. எனவே, இஸ்லாம் எதிர்பார்க்கும் உண்மையான விடுதலை எந்த சமூகத்திற்குக் கிடைத்தபோதிலும் அது முஸ்லிம்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சிக்குரிய விடயமே. அது மட்டுமன்றி எல்லா சமூகங்களினதும் விடுதலைக்காக உழைக்கக்கூடிய தன்னலமற்ற மனிதர்களையும் இஸ்லாம் உருவாக்கிவிடுகிறது. இத்தகைய மனிதர்கள் இனத்துவ பிரதேசவாத சிந்தனைகளில் இருந்து முற்றாக விடுபட்டவர்களாகவும் மனிதன் மனிதனுக்கு அடிமையாகும் இழி நிலையினை வன்மையாக எதிர்ப்போராகவும் இருப்பர்
உலகில் தோன்றிய இஸ்லாம் அல்லாத மனிதனின் உருவாக்கமாய் இருக்கும் எல்லா சிந்தனைகளும், வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ, தனியொரு இனத்தின் அல்லது பிரதேசத்தின் நலன்களைத் திருப்திப்படுத்தும் குறுகிய அரசியலுக்கு அடிமைப்பட்டு நிற்பதை ஆழமான ஆய்வுகளின் ஊடாகக் கண்டுகொள்ள முடியும். தனக்கு எதிரியாய் இருக்கும் ஒரு சமூகத்துக்குக் கூட நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஓர் உண்மையான முஸ்லிமின் கொள்கையாகும். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
'விசுவாசிகளே, அல்லாஹ்வுக்காக நீதமாக சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒரு வகுப்பினர் மீதுள்ள வெறுப்புணர்வு அவர்களுக்கு அநியாயம் செய்யுமாறு உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியதாகும். நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.'
- அல்-குர்ஆன் (5:8)
மேலும் உலகில் நீதியை நிலை நாட்டுவதில் தனதும் தனது குடும்பம், இனம், பிரதேசம் போன்றவற்றினதும் நலன்கள் குறுக்கிடக் கூடாது என்பதனை இஸ்லாம் உரத்துச் சொல்கிறது. மேலும் 'உலகம் தழுவிய நீதியை நிலைநாட்டுதல்' எனும் இவ் உன்னத இலட்சியப் பயணத்தில் எத்தகைய அதிகார சக்திகளுக்கும் கட்டுப்படக் கூடாது என்பதையும் உணர்வுகளுக்கு அடிடைமப்படக் கூடாது என்பதையும் அது வலியுறுத்துகிறது.
விசுவாசிகளே, நீங்கள் நீதியின் மீதே உறுதியாக நிலைத்து நில்லுங்கள். உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ உறவினர்களுக்கோ பாதகமாக இருந்த போதிலும் அல்லாஹ்வுக்காக சாட்சி சொல்பவர்களாய் இருங்கள். அவர் பணக்காரர் ஆயினும் ஏழை ஆயினும் அவர்கள் இருவருக்கும் அல்லாஹ் போதுமானவன். நீங்கள் இச்சைகளைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள். நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (நீதிக்காக சாட்சி கூற) மறுத்தாலும் அல்லாஹ் உங்கள் நடவடிக்கைகளை அறிகிறான்.
-அல்-குர்ஆன் (4:135)
இதுதான் இஸ்லாம் நிறுவ முயலும் உன்னத நீதியும் சமத்துவமும் ஆகும். வெறும் கொள்கையாக மட்டும் இதனை முன்வைக்காது, இத்தகைய சமத்துவமிக்க நீதியை நிலைநாட்டும் உறுதிமிக்க மனிதர்களை வரலாற்று நெடுகிலும் உருவாக்கிக் காட்டிய பெருமையும் இஸ்லாத்துக்கே சாரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக