வியாழன், 28 மார்ச், 2013

நிகழ்வு-ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

மட்/மம/காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு 28-03-2013 அன்று மு.ப 11.00 மணியளவில் பாடசாலை நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் அஷ;ஸெய்க் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நளீமி), உயர்தர இஸ்லாம் பாட ஆசிரியரான மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் (பலாஹி), எம்.ஏ.சீ.எம்.ஜஹானி ஆகியோர் விளக்கவுரைகளை நிகழ்த்தினர்.
அதிபர் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நளீமி) தனதுரையில் ஹலால் என்பது முஸ்லிம்களின் சமய உரிமை என்பதை விளக்கிக் கூறியதோடு, உலகில் பல்வேறு நாடுகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை உள்ளதெனினும் அந்நாடுகளில் இது தொடர்பாக எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை எனவும் இலங்கையில் அனைத்தையும் இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கும் நிலை காணப்படுவதால் இது பிரச்சினைக்குரிய விடயமாக நோக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக் கூறினார்.
மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் தனதுரையில் இஸ்லத்தில் ஹலால்-ஹராம் என்பதன் பரந்த விளக்கத்தை எடுத்துக் கூறியதோடு, உணவு தொடர்பாக இஸ்லாத்தின் ஹலால்-ஹறாம் வரையறைகளையும் விளக்கினார். இறைவனின் கட்டளை எனற அடிப்படையிலும் சுகாதார நோக்கிலும் ஹலால்-ஹறாம் தொடர்பான சட்ட விதிகளைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் தனதுரையில் அவர் எடுத்துக் கூறினார்.
ஆசிரியர் எம்.ஏ.சீ.எம்.ஜஹானி தனதுரையில் மருத்துவ ரீதியாக இஸ்லாத்தின் உணவு தொடர்பான சட்டவிதிகள் எந்தளவு தூரம் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை விளக்கியதோடு, தற்கால சூழ்நிலையில் ஹலால் தரச்சான்றுப்படுத்தல் பொறிமுறையின் அவசியத்தையும் விளக்கினார். மேலும், முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதோருக்கும் ஹலால் தரச்சான்றிதழ் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் தெரிவித்தார். ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கும் இந்நிகழ்வில் பதிலளிக்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக