ஹலால் விவகாரமும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்
(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்;ட)தும், கழுத்து நெரித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம்.
அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;, அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;. இன்றைய தினம் நிராகரிப்பாளர்கள், உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். (நபியே!) அவர்கள் (உண்பதற்குத்) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். –அல்குர்ஆன்(5:3-4)
உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை(ஹலால்), அனுமதிக்கப்படாதவை(ஹராம்) பற்றி விளக்கிக் கூறும் அல்குர்ஆனின் இரண்டு வசனங்களே இவை. ஒவ்வொரு சமயமும் அச்சமயத்தை ஏற்றிருக்கும் மக்களுக்கான ஒழுக்க விதிகளைக் கூறுகின்றன. அவற்றுள் சில சமயங்கள், அனுமதிக்கப்பட்ட மற்றும் ஆனுமதிக்கப்படாத உணவுகள் பற்றிய வரையறைகளையும் முன்வைக்கின்றன. கிறிஸ்தவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களில் இவை போன்ற சட்டங்களைக் காணமுடியும். (உதாரணமாக லேவியர் 7:24-27, லேவயர் 17:10-15, உபாகமம் 14:3-20 போன்றன)
இஸ்லாமும் உணவு பற்றிய வரையறைகளைத் தெளிவாக முன்வைக்கிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவையும் இஸ்hமியக் கொள்கைக்கு (அகீதாவுக்கு) ஊறு விளைவிக்காதவையுமான பரிசுத்தமான உணவுப் பொருட்கள் அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கிறது. ஹலால் என்பதன் பொருள், 'அனுமதிக்கப்பட்டது' என்பதாகும்.
ஹலால் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இனவாதமே முக்கிய காரணியாக இருந்தபோதிலும் இம்முரண்பாட்டு நிலை முஸ்லிமல்லாத பாமர பெரும்பான்மை மக்கள் மத்தியில் இலகுவாகச் சென்றடைவதற்கு முக்கிய காரணியாய் இருப்பது, ஹலால் தொடர்பான தெளிவின்மையாகும். ஹலால் என்பது கடவுக்குப் படைக்கப்பட்ட உணவு எனும் கருத்து பாமர மக்களிடம் மட்டுமன்றி நாட்டின் அமைச்சுப் பதவிகளில் வீற்றிருக்கும் பெரும்பான்மை மக்களிடமும் நிலைகொண்டுள்ளது என்பது, அண்மைக்காலமாக அவர்களால் வெளியிடப்படும் கருத்துக்களிலிருந்து தெளிவாகின்றது.
எமது சமூகத்தில் முக்கியமான இரண்டு குறைபாடுகள் நிலவுகின்றன. ஒன்று, முஸ்லிமல்லாதோருக்கு எமது சமய விதிகள், பண்பாடுகள் குறித்த சரியான விளக்கங்களினூடாக அவை தொடர்பான நேரான மனப்பதிவுகளை ஏற்படுத்தத் தவறியது. மற்றையது, மாற்று மதத்தவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய பரிபாசைகளைப் பயன்படுத்தாமலிருப்பது. ஹலால் என்ற சொற்பிரயோகம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இஸ்லாமிய தஃவா களத்திலுள்ளோர் இந்த விடயங்களில் கரிசனை காட்டுவது காலத்தின் தேவையாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் மிக முக்கியமான படிப்பினை ஒன்றுள்ளது. ஹலால், ஹறாம் பற்றிய விளக்கங்களைக் கூறிய இறைவன், தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறான்: 'நிராகரிப்பாளர்கள், உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக.'
இஸ்லாத்தின் வளர்ச்சி குறித்த அச்சமே இன்றைய இஸ்லாமிய எதிர்ப்பு நிலைக்கு மிக முக்கிய காரணியாகும். அதாவது, இது அவர்களது தோல்வி மனப்பாங்கின் வெளிப்பாடாகும். எமது நாட்டில் தலைதூக்கியிருக்கும் இஸ்லாமிய விரோத முயற்சிகளின் பின்னணியில் சர்வதேச இஸ்லாமிய விரோத சக்திகளின் கரங்கள் உள்ளன என்பது இலகுவில் அனுமானிக்கக்கூடிய பேருண்மையாகும் எனவே, இத்தகைய இஸ்லாத்துக்கு விரோதமாகச் செயற்படும் மேலாதிக்க சக்திகளைக் குறித்து அச்சப்படுவதை விடுத்து, அல்லாஹ்வுக்கு அஞ்சுவதும் அந்த வல்லமை மிக்க இறைவனையே நம்பி நிற்பதுமே எமது உளப்பாங்காக அமைய வேண்டும். தனது மார்க்கத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் எனும் பொறிமுறையை அல்லாஹ் நன்கறிந்தவன். அதேவேளை, இந்த மார்க்கத்தின் வளர்ச்சிக்காக எங்களால் முடியுமான அத்தனை பணிகளையும் மேற்கொள்ளவேண்டியது எமது பொறுப்பாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக