ஞாயிறு, 24 மார்ச், 2013

நிகழ்வு- சமயங்களுக்கூடாக விழுமியக் கல்வி (பல்சமயக் கருத்தரங்கு)

தேசியக் ப்கல்வி நிறுவகத்தினால் நடத்தப்படும் கல்விமானி பட்ட பாடநெறியை மட்டக்களப்பு கற்கை நிலையத்தில் தொடரும் 3ம் வருட ஆசிரிய மாணவர்களுக்கான 'சமயங்களுக்கூடாக விழுமியக் கல்வி' எனும் தலைப்பிலான பல்சமயக் கருத்தரங்கு, 24-03-2013 அன்று காலை 9:00 மணிக்கு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆராதனை மண்டபத்தில் பாடநெறி இணைப்பாளரும் அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபருமான திரு ஏ.எஸ்.யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கற்கை நிலைய 3ம் வருட மாணவர், எஸ்.சுதாகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வானது மும்மதப் இறை வணக்கங்களுடன் ஆரம்பமானது.

இந்து சமயத்தின் சார்பில் மட்டக்களப்பு சைவத் திருமுறை மன்றத் தலைவர், சித்தாந்த வித்தகர் ஐயா சிவப்பிரகாசம் அவர்களும் கிறிஸ்தவ சமயத்தின் சார்பில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர், அருட்பணி நவாஜி அடிகளார் அவர்களும் இஸ்லாம் சமயத்தின் சார்பாக முன்னாள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ;ட விரிவுரையாளருமான கலாபூஸணம் மௌலவி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி) அவர்களும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் வவுனியா கல்வி மானிப் பட்டக் கற்கை நெறி இணைப்பாளரும் உடற்கல்வி சிரேஷ;ட விரிவுரையாளருமான திரு. டீ.எம்.தேவேந்திரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்கள் சார்பாக மனித விழுமியங்கள் சார்ந்த உயர்ந்த கருத்துக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மும்மதப் பெரியார்களினாலும் முன்வைக்கப்பட்டன. ஓவ்வொரு ஆசிரியரும் தான் சார்ந்த சமய விழுமியங்களைத் திறம்படக் கற்று தமது மாணவர்களை வழிநடத்துவதோடு, ஏனைய சமயங்களைப் பற்றிய அறிவையும் பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக