குர்ஆன் பேசுகிறது
-மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் பலாஹி
எனது பெயர் :- குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான்
எனது மொழி :- அறபு
முதலில் இருந்த இடம் :- லவ்ஹூல் மஹ்பூல்
பின்னர் இறக்கப்பட்ட இடம் :- பைதுல் இஸ்ஸா (முதலாம் வானம்)
இந்த பூமிக்கு வருகை :- நபி (ஸல்) அவர்களின் 40ம் வயதில் ஹிறா குகையில்
இருக்கும்போது
இறங்கிய காலம் :- 23 வருடங்கள்
பாதுகாக்கப்பட்ட முறைகள் :- மனனம் (ஹாபிழ்)
எழுதுதல் (குத்தாபுல் வஹி)
செயற்படுத்துதல் (அமல் செய்தல்)
என்னை நூலுருப்படுத்தியவர்:- அபூபக்கர் (றழி)
ஸைத் இப்னு தாபித் தலைமையிலான குழு
நூலுருப்படுத்த தூண்டியவர்:- உமர் (றழி)
அதற்கான காரணம் :- யமாமா யுத்தத்தில் 70க்கு மேற்பட்ட ஹாபிழ்கள் கொலை
செய்யப்பட்டமை.
ஒரே அமைப்பில் வெளியிட்டவர் :- உதுமான் (றழி)
ஜாமிஉல் குர்ஆன்
அதற்கான காரணம் :- ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக ஓதியதை,
ஹூதைபதுல் யமானி அவதானித்தார்.
அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை.
ஏன்னுடைய அமைப்பு :- வசனங்கள் - 6666
ஸூறாக்கள் - 114
ஜுஸ்உ - 30
மன்ஸில் - 07
மக்கி ஸூறாக்கள் - 86
மதனி ஸூறாக்கள் - 28
சஜதாக்கள் - 14ஃ15
பெரிய ஸூறா :- ஸூறதுல் பகரா
சிறிய ஸூறா :- ஸூறதுல் கவ்தர்
கல்புல் குர்ஆன்:- ஸூறா யாஸீன்
உம்முல் குர்ஆன் :- ஸூறதுல் பாத்திஹா
முதலில் இறங்கிய ஸூறா :- ஸூறதுல் அலக்
பிஸ்மி இல்லாத ஸூறா :- ஸூறது தௌபா
இரண்டு பிஸ்மி உள்ள ஸூறா :-ஸூறது நம்ல்
என்னுடைய சிறப்புக்கள் :- இறுதி வேதம்.
நிரந்தரமான அற்புதம்.
முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன.
ஏன்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது.
என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:- உள்ளம் நிம்மதி அடையும்.
ஓர் எழுத்துக்கு பத்து நன்மை
மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும்.
(இன்னும் பல.......)
எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:- ஓதுதல், மனனம் செய்தல், பின்பற்றுதல்,
எத்தி வைத்தல்.
இன்று என்னுடைய நிலை :- சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள். இன்று
நாடகத்தைப் பார்க்கின்றார்கள்.
வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன்.
பள்ளிவாசல்களில் அழகிற்காக அடுக்கப்பட்டுள்ளேன்.
உங்களிடம் சில கேள்விகள்:- மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா?
அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாக
ஓதி முடித்தீர்களா?
ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது
ஓதுகின்றீர்களா?
எனது வேண்டுகோள் :- பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
வீடுகளில் தினமும் ஓதுங்கள், மனனம் செய்யுங்கள்.
என்னைப் பின்பற்றி மறுமையில் என் சிபாரிசைப் பெற்று சுவனம்
செல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக