சமூக, சமயவியல் நோக்கில்-ஹலால் உணவுகள்
இன்றைய சூழலில் ஹலால் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் காணலாம். ஹலால் பற்றிய புரிந்துணர்வின்மை அண்மைக் காலத்தில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளமையினையும் அவதானிக்க முடியும். 'ஹலால்' எனும் அறபு வார்த்தையானது, 'அனுமதிக்கப்பட்டது' எனும் பொருளைத் தரும். இதனோடு இணைந்ததாக ஹலால் என்பதன் எதிர்க் கருத்தைத் தரும் சொல்லான 'ஹறாம்' என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 'ஹறாம்' எனும் அறபு வார்த்தை 'தடைசெய்யப்பட்டது' எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது
இஸ்லாமிய ஷரீஆவில் 'ஹலால்-ஹறாம்' எனும் கலைச்சொற்கள், தனியே உணவுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டனவல்ல. அவை வாழ்வின் அனைத்து விவகாரங்களோடும் தொடர்பானவை. தொழில், வியாபாரம், கொடுக்கல்-வாங்கல், உழைப்பு, திருமண உறவுகள், தனிமனித-சமூகத் தொடர்புகள், உணவு, உடை, பாத்திரங்கள் என அனேக விடயங்களுள் வியாபித்து நிற்கும் ஒன்றாகும். உதாரணமாக அரச துறையில் அல்லது தனியார் துறையில் பணியாற்றும் ஓர் ஊழியர், நேர்மையாகப் பணியாற்றிப் பெறும் ஊதியம் 'ஹலால்'-(அனுமதிக்கப்பட்டது) ஆகும். அதேவேளை, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை அலட்சியம் செய்யும் ஓர் ஊழியர் பெறும் சம்பளம் 'ஹறாம்' ஆகும். இதேபோன்று வட்டியின்மூலம் கிடைக்கும் வருமானம் 'ஹறாம்' ஆகும், அனுமதிக்கப்பட்ட வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் 'ஹலால்' ஆகும்.
உண்மையில் ஹலால் என்பது வரையறையற்றதாகும். ஹறாம் என்பதே குறிப்பானதாகும். இஸ்லாம் தடைசெய்யப்பட்டவற்றையே (ஹறாமானவற்றை) குறிப்பாகக் கூறியுள்ளது. அவை தவிர ஏனைய அனைத்தும் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஆகும். உதாரணமாக இஸ்லாம் வட்டியை ஹறாம் (தடைசெய்யப்பட்டதாக) ஆக்கி வியாபாரத்தை அனுமதிக்கிறது .(பார்க்க: அல்குர்ஆன், 2:275). எனவே பொதுவாக வியாபாரம் ஹலால் ஆகும். எனினும், சில வியாபார முறைகளைத் தடைசெய்யப்பட்டவைகளாக (ஹறாமானவையாக) வரையறுத்துச் சொல்கிறது. அவை தவிர ஏனைய வியாபாரங்கள் அனைத்தும் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஆகும்.
இஸ்லாம் தாய், சகோதரி, புதல்வி, சகோதரர்களின் புதல்வியர், பெற்றோரின் சகோதரிகள் போன்ற சில நெருங்கிய உறவுள்ள பெண்கள், திருமணம் செய்ய ஹறாம் ஆனவர்கள் (தடுக்கப்பட்டவர்கள்) என வரையறுத்துச் சொல்கிறது. (பார்க்க: அல்குர்ஆனின் 4ம் அத்தியாயத்தின் 23ம் வசனம்). அதேபோன்று, இணை வைக்கும் அல்லது இறை இருப்பை மறுக்கும் பெண்களையும் (அல்குர்ஆன் 2:221) தீய நடத்தையுள்ள பெண்களையும் (அல்குர்ஆன் 24:3, 4:25) கணவனுள்ள பெண்களையும் (அலகுர்ஆன் 4:24) மணமுடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. இவர்களைத் தவிர ஏனைய பெண்களில் எவரையாவது மணமுடிப்பது அனுமதிக்கப்பட்டது (ஹலால்) ஆகும்.
இதே வரிசையில்தான் இஸ்லாம் உணவிலும் ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹறாம் (தடை செய்யப்பட்டது) என்ற வரையறைகளை விதிக்கிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்காத சுத்தமான உணவுகளையே உட்கொள்ளவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. (பார்க்க: அல்குர்ஆன் 2:168, 5:4). இவ்வாறான உணவுகளையே ஹலாலான உணவுகள் என இஸ்லாமிய பரிபாஷயில் அழைக்கின்றோம். அனேகமான சமய நெறிகளும் கலாச்சாரங்களும் அனுமதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட உணவுகள் பற்றிய எல்லைக்கோடுகளை வகுத்துள்ளன. இவ்வாறான வரையறைகளில் சமயங்களுக்கிடையே ஒற்றுமை காணப்படலாம். உதாரணமாக பௌத்த சமயம் போதைப் பொருட்களை விலக்குமாறு போதனை செய்வதைப்போன்றே இஸ்லாமும் போதைப் பொருட்களை முற்றாகத் தடைசெய்கிறது. பன்றி, இரத்தம், தானாகச் செத்தவை போன்றவற்றை இஸ்லாம் உண்ணத்தகாதவை எனக் கூறுகிறது (பார்க்க: அல்குர்ஆன் 2:173, 5:3, 6:145, 6:115) அதேபோன்று கிறிஸ்தவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களும் இவற்றைத் தடைசெய்கின்றன (பார்க்க: ஆதியாகமம் 9:4, லேவியர் 7:26, லேவியர் 17:10-15, உபாகமம் 14:8, உபாகமம் 14:21, உபாகமம் 12:26, உபாகமம் 12:23, உபாகமம் 15:23). எனினும், சில சந்தர்ப்பங்களில் இவ்விடயத்தில் சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கிடையில் வேறுபாடுகளும் காணப்படலாம். யூத சட்டத்தில் ஆடு, மாடு போன்றவற்றின் கொழுப்பை உண்பது தடைசெய்யப்பட்டிருந்தது (பார்க்க அல்குர்ஆன் 6:146, திருவிவிலியம்-லேவியராகமம்; 7:23). அதேபோன்று, முயல், ஒட்டகம் போன்றவற்றின் மாமிசத்தினையும் யூத சட்டம் தடை செய்கிறது (பார்க்க: உபாகமம் 14:7). ஆனால், இஸ்லாம் இவற்றைத் தடைசெய்யவில்லை.
சில சமய நெறிகள் மாமிச உணவுகளை முற்றாகத் தவிக்குமாறு கூறுகின்றன, இஸ்லாமிய, யூத, கிறிஸ்தவ சமயங்கள் மாமிச உணவை முற்றாகத் தடைசெய்யவில்லை. இவ்வாறான உணவு தொடர்பான சட்ட வேறுபாடுகள் சமூகங்களுக்கிடையில் இருப்பதை அல்குர்ஆனும் உறுதிப்படுத்துகிறது (பார்க்க: அல்குர்ஆன் 6:146). எனவே, ஒரு பன்மைச் சமூகத்தில் வாழும் ஒருவர், இவ்வாறான கலாச்சார சமய வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு தனது தனித்துவத்தினையும் பேணி விட்டுக்கொடுப்புடன் வாழ்வதே பொருத்தமானதாகும்.
அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட உணவுகள் பற்றிய சட்டங்களை இஸ்லாமிய ஷரீஆ தெளிவாக முன்வைக்கிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவையும் போதையூட்டாதவையுமான அனைத்துத் தாவர உணவுகளையும் இஸ்லாம் அனுமதிக்கப்பட்டவையாக (ஹலாலானவையாக) கருதுகிறது. கடல்வாழ் விலங்குகள் தாமாக இறந்தாலும் அவற்றை உண்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. (பார்க்க: அல்குர்ஆன் 5:96, ஸஹீஹூல் புகாரி 5493, ஸஹீஹ் முஸ்லிம் 3915). தரை வாழ் விலங்குகளில் தானாகச் செத்த அனைத்தையும் இஸ்லாம் தடைசெய்கிறது (அல்குர்ஆன் 2:173, 5:3, 6:115 பன்றி (அல்குhஆன் 2:173, 5:3,; 6:115, 6:145). தரை வாழ் விலங்குகளில் வேட்டைப் பல் உள்ள வலங்குகள் (ஸஹீஹூல் புகாரி 5530, ஸஹீஹ் முஸ்லிம் 3910, 3911, 3912, 3913), வேட்டையாடக்கூடிய கூரிய நகமுள்ள பறவைகள் (ஸஹீஹ் முஸ்லிம் 3914), நாட்டுக் கழுதை (ஸஹீஹூல் புகாரி 5521, 5522 ஸஹீஹ் முஸ்லிம் 3920, 3921), கொல்லத் தடை விதிக்கப்பட்டவை, கொல்லுமாறு பணிக்கப்பட்டுள்ள தீங்கிழைக்கும் விஷ ஜந்துக்கள், அருவருப்பான பூச்சி புழுக்கள் போன்றவற்றை உண்பதை இஸ்லாம் தடை செய்கிறது. அனைத்துப் பிராணிகளின் இரத்தத்தினையும் இஸ்லாம் தடைசெய்கிறது (அல்குர்ஆன் 2:173, 5:3). அல்லாஹ் அல்லாதவற்றிற்காக பலியிடப்பட்டவையும் ஹராமாகும். உண்ண அனுமதிக்கப்பட்ட விலங்குகளை இஸ்லாமிய ஷரீஆ காட்டித்தரும் முறையில் அறுத்தால், அல்லது வேட்டையாடிப் பிடித்தால் மட்டுமே அது ஹலால் (-அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்.
பெரும்பாலான இயற்கை உணவுகளைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிமால், அது ஹலாலானதா அல்லது ஹராமானதா எனக் கண்டறிவது கடினமான விடயமல்ல. எனினும், பொதி செய்யப்பட்டு வரும் இறைச்சி வகைகள் மற்றும் செயற்கையான உணவுகளைப் பொறுத்தவரை அவற்றின் உற்பத்திச் செயன்முறையை சாதாரண நுகர்வோரினால் முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. செயற்கையாக தயாரிக்கப்படும் உணவுகளில் சுவையூட்டிகள், நற்காப்புப் பதார்த்தங்கள் (Preservative), நிறமூட்டிகள் (Coloring), மெலிதாக்கிகள் (Emulsifier) என பல்வேறு பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றுள் சில, விலங்குகளின் உடற் பாகங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறான பொருட்களைப் பற்றிய முழு விபரங்களையும் ஓர் உணவுப் பொருளின் பெயர்ச் சுட்டியைப் பார்த்து அறிந்துகொள்ள முடியாது. மேலும் சில உணவுப் பொருட்களின் உற்பத்திச் செயன்முறையின்போது அவை விலங்குப் பாகங்களுடன் தொடர்புறும் வாய்ப்பு ஏற்படலாம். உதாரணமாக நீர் சுத்திகரிப்பின்போது பயன்படுத்தப்படும் வடிகட்டிகளுள் சில விலங்குகளின் என்புகளால் ஆக்கப்படுகின்றன (பார்க்க: Halal Directory 2012-13, Division for Halal Certification-All Ceylon Jamiyathul Ulama, p.21), அதேபோன்று, உணவு உற்பத்திச் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் சில தூரிகைகள் விலங்கு உரோமங்களால் ஆக்கப்படுகின்றன. எனவே, இவற்றிற்கான தரச் சான்றுப்படுத்தல் ஒன்று அவசியமாகிறது. இதனையே ஹலால் தரச்சான்றிதழ் என அழைக்கிறோம்.
உலகில் பல்வேறு நாடுகளில் ஹலால் தரச்சான்றிதழ் வழங்கும் நடைமுறை காணப்படுகிறது. இதனை உலகிலுள்ள பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துகின்றன. உற்பத்திப் பொருட்களின் மேலுறைகளில் காணப்படும் ஹலால் தரச்சான்றுப்படுத்தல் இலச்சினையினைக் கொண்டு அப்பொருளின் உள்ளடக்கம் மற்றும் உற்பத்திச் செயன்முறை என்பன ஹலாலானதா என்பதைக் கண்டுகொள்ள முடியும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஹலால் சான்றுப்படுத்தலானது முஸ்லிமல்லாத ஒருவருக்கும் பயனுள்ளதாக அமையும். உதாரணமாக ஹலால் தரச் சான்றிதழ் பெற்ற உணவுகளில் அற்ககோல் காணப்படுவதில்லை. பௌத்த தர்மத்தைப் பின்பற்றும் ஒருவருக்கும் உடல் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு அற்ககோலைத் தவிர்க்க முனைபவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும். பொதுவாகவே ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் பொருட்கள் உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்காதனவாகவும் தூய்மையானவையாகவும் காணப்படுகின்றன. எனவே ஹலால் தரச்சான்றிதழ் முறையை ஓர் சமய அடையாளமாக நோக்காது பயனுறுதியுள்ள தரச்சான்றுப்படுத்தல் பொறிமுறையாக நோக்குவதே, பொருத்தமானதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக